| 245 | : | _ _ |a புருடோத்தம பெருமாள் கோயில் - |
| 246 | : | _ _ |a திருவண்புருடோத்தம் |
| 520 | : | _ _ |a திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் திருநாங்கூரிலேயே உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான் புருஷோத்தமன். “புருஷோத்தம இதி வைஷ்ணவா” என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானை புருஷோத்தமன் என்ற பெயரில் அழைப்பார்கள். இவனைப் பற்றிக் கூறும் வித்தைக்கு “புருஷோத்தம வித்னய” என்று பெயர். தமிழ்நாட்டில் உள்ள திவ்ய தேசங்களில் புருஷோத்தமன் என்ற பெயரில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுந்தான். புருஷோத்தமனைத் தான் தூய தமிழில் புருடோத்தமன் என்கிறார் மங்கை மன்னன். குழந்தைக்கு வரும் துன்பத்தை தாய் தந்தை போக்குவர். தம்மிடம் தோன்றிய பிரம்மா முதலான தேவாதி தேவர்கட்கு உண்டாகும் துன்பத்தைப்போக்கி தம்மை எதிர்ப்பவர்களை அழித்து உலகத்தை ரட்சிக்கும் புருடோத்தமன் இவனே. (பக்தர்களும், முக்தர்களும், நித்யர்களுமாகிய புருஷர்கள் யாவரினுஞ் சிறந்தவனென்னும் பொருள்படும்) குறைவில்லா ரட்சிப்புத் தன்மை கொண்டு வள்ளல்போல் தன் அருளை வாரி வழங்குதலால் (வள்ளல் தன்மையை உயர்வு படுத்திக் காட்ட) வண் புருடோத்தமன் ஆனான். இந்த சம்பந்தத்தால் இத்தலம் வண் புருடோத்தமமாயிற்று. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளினார். தை அமாவாசைக்கு மறுநாளான கருட சேவைக்கு இந்தப் புருடோத்தமனும் புறப்படுவார். |
| 653 | : | _ _ |a கோயில், வைணவம், பெருமாள், விஷ்ணு, திருவண்புருடோத்தமம், புருடோத்தமர் கோயில், திருநாங்கூர், சீர்காழி, நாகப்பட்டினம் |
| 700 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர் |
| 909 | : | _ _ |a 2 |
| 910 | : | _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. |
| 914 | : | _ _ |a 11.17870534 |
| 915 | : | _ _ |a 79.77673271 |
| 916 | : | _ _ |a புருடோத்தமன் |
| 917 | : | _ _ |a புருடோத்தமன் |
| 918 | : | _ _ |a புருடோத்தம நாயகி |
| 923 | : | _ _ |a திருப்பாற்கடல் தீர்த்தம் |
| 925 | : | _ _ |a நான்கு கால பூசை |
| 926 | : | _ _ |a கருடசேவை |
| 928 | : | _ _ |a இல்லை |
| 929 | : | _ _ |a புருடோத்தமன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். |
| 932 | : | _ _ |a இக்கோயிலின் விமானம் சஞ்சீவி விக்ரஹ விமானம் என்ற வகையைச் சார்ந்தது. |
| 933 | : | _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 | : | _ _ |a பள்ளிகொண்ட ரங்கநாதர் கோயில், வைகுண்டநாதர் கோயில், மதங்கீசுவரர் கோயில் |
| 935 | : | _ _ |a இத்தலம் சீர்காழியிலிருந்து கிழக்கே 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது. |
| 936 | : | _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
| 937 | : | _ _ |a திருநாங்கூர் |
| 938 | : | _ _ |a திருநாங்கூர் |
| 939 | : | _ _ |a திருச்சி |
| 940 | : | _ _ |a சீர்காழி வட்டார விடுதிகள் |
| 995 | : | _ _ |a TVA_TEM_000204 |
| barcode | : | TVA_TEM_000204 |
| book category | : | வைணவம் |
| cover images TVA_TEM_000204/TVA_TEM_000204_திருவண்புருடோத்தமம்_புருடோத்தமப்பெருமாள்-கோயில்-0001.jpg | : |
|
| Primary File | : |